திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (18:05 IST)

விஷாலின் உதவியை நிராகரித்த பிரபல அமைப்பு !

புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும் 1800 மாணவர்களின் கல்விச் செலவை நடிகர் விஷால் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், அவரது உதவியை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு, விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிமி படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது ஐதராபாத் புரமோஷன் நிகழ்ச்சியின் போது மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் குறித்து பேசினார்.

அப்போது புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும் 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் நான் ஏற்க உள்ளதாக அறிவித்தார். பின்னர் புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்திருந்துள்ளார். மேலும் 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார்.

ஆனால், இதுகுறித்து, சில மாதங்கள், எந்த  நடவடிக்கையும் விஷால் மேற்கொள்ள வில்லை என தெரிகிறது. சமீபத்தால், தான் அறிவித்தபடி, மாணவர்களின் கல்விச் செலவைத் தான் ஏற்பதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். ஆனால், புனித் ராஜ்குமார் தரப்பினர், இது ஏற்கனவே ஒரு டிரஷ்டின் மூலம் இயங்கி வருவதாகவும், அதனால், இது அப்படியே தொடரட்டும் என விஷாலிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.