திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:34 IST)

‘பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க நானும் ஆசைப்பட்டேன்…’ இயக்குனர் ராஜமௌலி

இயக்குனர் ராஜமௌலி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பாகுபலி மற்றும் RRR ஆகிய படங்களின் மூலம் உருவாகியுள்ளார்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றி சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் “பொன்னியின் செல்வன் நாவலை நான் ஓடிடி தளத்துக்காக வெப் சீரிஸாக எடுக்க நினைத்தேன். இப்படி ஒரு நாவலை திரைப்படமாக எடுப்பது கடினம். ஆனால் 15 மணிநேரம் 20 மணிநேரம் ஓடும் வெப் சீரிஸ் எடுப்பதுதான் பொருத்தம். இதுபோன்ற தளங்களுக்கு ஓடிடி தளங்கள்தான் சரியானவை” எனக் கூறியுள்ளார்.