திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (17:54 IST)

யோகிபாபுவின் அடுத்த படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ்!

தமிழ் திரை உலகின் நம்பர்-1 காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்களும் அவ்வப்போது வெற்றி பெற்று வருகின்றன என்பதும் தெரிந்தது 
 
அந்த வகையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’பேய்மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்த நிலையில் இன்று சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்தனர். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யோகிபாபு, மாளவிகா மேனன், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்கியுள்ளார் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பன்னீர்செல்வம் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.