ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (09:27 IST)

நான்கு நாளில் 400 கோடி வசூல்… பட்டைய கிளப்பும் ஷாருக் கானின் பதான் !

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தினர். ஆனால் படம் தேசபக்தி பற்றிய படம் என்பதால் ரிலீஸூக்கு பிறகு எதிர்ப்புக்குரல்கள் அடங்கியுள்ளன.

எதிர்பார்த்ததை விட இந்த படம் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. முதல் நான்கு நாட்களில் மட்டும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் இதுவரை எந்தவொரு பாலிவுட் படமும் செய்யாத வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.