திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2017 (13:17 IST)

காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா திடீர் விலகல்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே இவர் சுமார் பத்து படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது
 
இந்த நிலையில் ஓவியாவுக்கு கோலிவுட் திரையுலகில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இருப்பினும் அவர் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிக்க கமிட் ஆனார். 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் 'காஞ்சனா 3' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தற்போது 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்புகள் துவங்க தாமதம் ஆகிவருவதால், அந்த படத்தில் இருந்து விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் தாம் வாங்கிய முன்பணத்தையும், வட்டியுடன் நடிகை ஓவியா திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன..