என்னை யாரும் பின்பற்ற வேண்டாம்: ஓவியாவின் அட்வைஸ் யாருக்கு தெரியுமா?

Last Modified புதன், 10 ஜூலை 2019 (08:12 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களும் தாங்களும் ஓவியா போல் புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஓவியாவை இமிடேட் செய்து வருகின்றனர். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போல் நடிக்க முயன்று ஐஸ்வர்யா தத்தா தோல்வி அடைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சாக்சி, ஷெரின், அபிராமி, மீராமிதுன் ஆகியோர் சிலசமயம் தங்களுடைய இயல்பு நிலையை மறந்து ஓவியாவை இமிடேட் செய்வது போல் நடந்து கொள்கின்றனர்., ஆனால் ஓவியாவை ரசித்த மக்கள், இதனை ரசிக்க வில்லை
இந்த நிலையில் சினிமா நிகழ்ச்சில் ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'நாங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சென்றோம். வெளியே என்ன நடக்குது என்பது எங்களுக்கு தெரியாது என்பதால் நாங்கள் இயல்பாக இருந்தோம். நான் ரொம்ப சுதந்திரமாக, என் மனதுக்கு தோன்றியதை செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் என்னை பலருக்கு பிடித்தது.
ஆனால் இப்போதுள்ள போட்டியாளர்கள் வெளியே என்ன நடக்கும் என்பதை கணித்து வேண்டுமென்றே என்னைபோல் நடிக்கின்றனர். என்னை இமிடேட் செய்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அவர்கள் தங்களைபோலவே இயல்பாக இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இதனை புரிந்து அவர்கள் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்' என்று கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :