ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (15:43 IST)

குயின்சியை தொந்தரவு பண்ணும் அசல்..! இதெல்லாம் சரியா? – நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

Bigg Boss
பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள அசலின் செயல்களுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், குயின்சி உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரமாகியுள்ள நிலையில் ஆரம்பத்திலேயே ஜி.பி.முத்துவுக்கும், தனலெட்சுமிக்கும் ஏற்பட்ட மோதல் பரபரப்பை உண்டாக்கியது. இதற்கிடையே பாடகர் அசல் எப்போதும் குயின்சி பின்னாலேயே திரிந்து கொண்டிருப்பதும் நடக்கிறது.


நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசி முடித்த பின்னர் விக்ரமனிடம் குயின்சி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அசல் குயின்சியின் கைகளில் தடவிக் கொண்டே இருந்தார். குயின்சி தட்டிவிட்டாலும் அவர் தொடர்ந்து அவ்வாறு செய்தார்.

ஒரு நிகழ்ச்சியில் பலர் முன்னால் ஒரு பெண்ணிடம் அசல் நடந்து கொள்ளும் இந்த விதம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கண்டன கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edited By: Prasanth.K