ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (20:13 IST)

நடிகை நமிதாவுக்கு இரட்டை குழந்தைகள்: ரசிகர்கள் வாழ்த்து!

Namitha
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நமீதாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக வெளி வந்த தகவலை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
அஜித் நடித்த பில்லா, விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை நமீதா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்
 
இந்த நிலையில் நடிகை நமீதா கடந்த 2017 ஆம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார் 
 
கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்து வந்த நமிதாவுக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்