நெருங்கி பழகாததால் என் காதல் தோல்வி! காஜல் அகர்வால் உருக்கம்!

Last Updated: புதன், 12 ஜூன் 2019 (10:08 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் தூள் கிளப்பி வரும் காஜல் அகர்வாலும் காதல் தோல்வி அடைந்தவர் தானாம்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதற்காக இயக்குனர் ஷங்கரின் கட்டளைப்படி வர்மக்கலை கற்றுவருகிறார். 
 
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் பேட்டி ஒன்றில் "தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்துள்ளார். அதில் சினிமாவிற்கு வரும் முன்பே தனக்கு ஒரு காதல் தோல்வி இருந்தது அது தோல்வியில் முடிந்ததையடுத்து பிறகு சினிமாவில் நுழைந்து முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில் காஜல் ஒருவரை காதலித்தாராம்.
ஆனால் அவர் சினிமா துறையை சேர்ந்தவரில்லை. என்னால் அவருடன் நேரத்தை செலவிட முடியவில்லை. காதலில் முக்கியம் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக்கொள்வது. நேரம் செலவிடுவது தான். ஆனால் என்னால் அந்த காதலுக்காக அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் என் காதல் தோல்வியில் முடிந்தது. என காஜல் அகர்வால் உருக்கமாக தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :