திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (14:53 IST)

எல்லை மீறும் மெர்சல் பட பட்ஜெட்; வாரி இரைக்கும் தயாரிப்பு நிறுவனம்!!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் மெர்சல் இறுதிகட்ட படபிடிப்பில் உள்ளார். நாளை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.


 
 
இசை வெளியீட்டு விழாவை லைவ் டெலிகேஸ்ட் செய்ய தொலைக்காட்சி நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன. இந்நிலையில் படத்தின் பட்ஜெ எக்கசக்கமாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
மெர்சல் படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடியிலிருந்து ரூ.135 கோடி வரை உயர்ந்துவிட்டதாம், எப்படியும் படம் வெளியாவதற்குள் ரூ.150 கோடி வரும் என தெரிகின்றது.
 
இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு மட்டும் தயாரிப்பு குழு ரூ.4 கோடி செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஒரு தமிழ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இத்தனை கோடி செலவு என்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.