கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ணன் பட செட் – தனுஷ் எடுத்த முடிவால் அதிர்ச்சி!

Last Modified வெள்ளி, 16 அக்டோபர் 2020 (11:30 IST)

கர்ணன் படத்துக்காக சென்னையில் மீண்டும் ஒரு மிகப்பெரிய செட்டை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாக்டவுன் முடிந்ததும் படம்பிடிக்கவேண்டிய காட்சிகளில் முக்கியமானது கிளைமேக்ஸ் காட்சியாகும். இதற்காக பிரம்மாண்டமாக பல வீடுகள் கொண்ட செட் ஒன்று போடப்பட்டுள்ளது, கதைப்படி கிளைமேக்ஸில் அந்த குடிசைகள் அனைத்தும் கொளுத்தப்பட்டு 500 க்கும் மேற்பட்ட நடிகர்களைக் கொண்டு படமாக்க இயக்குனர் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது அந்த செட்கள் அனைத்தும் அழிந்து போய்விட்டதால் மீண்டும் அங்கே செட் அமைக்கும் பணிகளைத் தொடங்கலாம் என படக்குழு சென்றபோது மக்கள் கொரோனா பயத்தால் மக்கள் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையாம். இதனால் தனுஷ் இப்போது சென்னையிலேயே செட்டை அமைத்து படத்தை எடுக்கலாம் என தனுஷ் சொல்ல இப்போது தாணுவுக்கு இரட்டை செலவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :