200 பேர்களுடன் வெள்ளத்தில் சிக்கிய தனுஷ் பட நாயகி! அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர்

Last Modified செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (21:50 IST)
தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் நாயகியும் பிரபல மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர் இமாச்சல பிரதேசத்தில் சுமார் 200 பேர்களுடன் வெள்ளத்தில் சிக்கி கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
நடிகை மஞ்சுவாரியர் 'கயிற்றம்' என்ற மலையாளபடத்தின் படப்பிடிப்பிற்காக '-இமாச்சல பிரதேசம் சென்றிருந்தார். சிம்லாவில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரு என்ற இடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது திடீரென பெய்த கனமழையால் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மஞ்சுவாரியர் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சுமார் 200 பேர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.
இதனையடுத்து மஞ்சுவாரியர் தனது சகோதரர் மதுவாரியருக்கு செல்போன் மூலம் நிலைமையை தெரிவித்தார். மதுவாரியர் பாஜகவில் செல்வாக்குள்ளவர் என்பதால் அவர் உடனடியாக இமாச்சல் பிரதேச முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும் இமாச்சல பிரதேச முதல்வர் வெள்ளத்தில் சிக்கிய மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில் மஞ்சுவாரியரும் படகுழுவினர்களும் கேரளா திரும்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :