வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2025 (14:16 IST)

விடாமுயற்சி படத்தை இயக்க அஜித் சார் இதனால்தான் தேர்ந்தெடுத்தார்.. மகிழ் திருமேனி பதில்!

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தைத் திரையில் பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தன. ஆனால் திடீரென்று லைகா நிறுவனம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என அறிவித்தது. இதையடுத்து அந்த படத்தின் மீதிருந்த சிக்கல்கள் எல்லாம் தீர்க்கப்பட்டு தற்போது  பிப்ரவரி 6 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இயக்குனர் மகிச் திருமேனி அளித்துள்ள ஒரு நேர்காணலில் “இந்த படத்தை இயக்க அஜித் சார் ஏன் என்னை தேர்ந்தெடுத்தார் என நான் அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் “இந்த படத்தை நாம் இருவருமே நம்முடைய comfort zone-ல் இருந்து வெளிவரும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்” என கூறினார்” என தெரிவித்துள்ளார்.