ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (08:36 IST)

லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் என்ன? வெளியான தகவல்!

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்துக்காக 2000 டான்ஸர்களோடு பிரம்மாண்டமான பாடல் ஒன்றை படக்குழு படமாக்கியது. இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார்.

இந்த பாடலில் விஜய்யோடு அர்ஜுன், மன்சூர் அலிகான் மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடனமாடியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடல் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் லியோ படத்தில் மடோனா நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் இப்போது கசிந்துள்ளது. படத்தில் விஜய்க்கு தங்கை வேடத்தில் மடோனா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மடோனா நடிக்கும் கதாபாத்திரம் கதையின் போக்கில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.