திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (14:56 IST)

மிகக் குறைந்த சம்பளம்…தோனியை சந்திக்க திட்டமிட்ட நடிகர் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் அவரது இந்த முடிவு பலருக்கும் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பிரபலங்கள் நட்சத்திரங்கள்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட்டில் இளம் முன்னணி நடிகரான ரான்வீர் சிங், தோனியுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.அதில், சில வருடங்களுக்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் குறைந்த சம்பளம். இருப்பினும் அதில் தோனியை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே சம்மதித்தேன்.அவர் அன்பானவர் எளிமையானர் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்பார் எனத் தெரிவித்துள்ளார்.