ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (10:32 IST)

ரஜினி கட்சியின் இளைஞரணிச் செயலாளர் லொள்ளு சபா பிரபலமா? பரபரப்பு தகவல்!

ரஜினி ஆரம்பிக்கவுள்ள கட்சியில் இளைஞரணி செயலாளராக லொள்ளு சபா ஜீவா நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்தும், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரஜினியின் கட்சியின் பெயர் மக்கள் சேவை மையம் என்றும் அதற்கான சின்னம் ஆட்டோ ரிக்‌ஷா என்றும் கூறப்பட்டுள்ளது. இதைப்பற்றி ரஜினியின் கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் கட்சி சம்மந்தமாக மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சியில் இளைஞரணிச் செயலாளராக லொள்ளு சபா புகழ் ஜீவா இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு பதிலாக டூப் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.