ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (08:15 IST)

“எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது.. ஆனாலும்”- மிஷ்கின் பற்றி லோகேஷ் நெகிழ்ச்சி பதிவு!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் படமாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் லோகேஷ், லியோ படத்தில் நடித்த மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் “ உங்களுடன் அவ்வளவு நெருக்கமாக பணியாற்றிய அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை சார். நீங்கள் எங்கள் அனைவரிடம் இனிமையாக நடந்துகொண்டீர்கள். உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. ஆனாலும் ஒரு மில்லியன் நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக இயக்குனர் மிஷ்கின் லியோ படத்தில் பணியாற்றியது குறித்து “இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் என்றும் -12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தனர் என்றும் சண்டை பயிற்சியாளர் அன்பறிவு மிகச்சிறந்த ஒரு சண்டை காட்சியை படமாக்கினார்கள். மேலும் உதவி இயக்குநர்களில் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது என நெகிழ்ந்த மிஷ்கின், படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான் என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான் அவன் நெற்றில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.