ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:39 IST)

வண்டியில் இருந்து விழுந்த சீரியல் நடிகை!

சைத்ரா ரெட்டி கயல் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது வண்டியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த்துவிட்டதாக கூறி இருக்கிறார். 

 
சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின்னர் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார். இந்த சீரியல் முடிந்த பின்னர் தற்போது சன் டிவியில் கயல் எனும் நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் சைத்ரா ரெட்டி கயல் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது வண்டியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த்துவிட்டதாக கூறி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தற்போது தேறியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.