1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:14 IST)

’’கர்ணன்’’ கொண்டாடப்படவேண்டியது.. ஆனால் ஒரு சிறு தவறு….. – உதயநிதி டுவீட்

கர்ணன் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ள நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி அதிலுள்ள தவற்றைச் சுட்டிக்காண்பித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

 
இப்படம்நேற்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் படங்களிலேயே முதல் நாள் வசூலில் கர்ணன் திரைப்படம் புதிய சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி அதிலுள்ள தவற்றைச் சுட்டிக்காண்பித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் @dhanushkraja,அண்ணன் @theVcreations, இயக்குநர் @mari_selvaraj  மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி எனத் தெரிவித்துள்ளார்.