ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 17 மே 2023 (12:23 IST)

கறிக்குழம்பு வாசம்... "காதர் பாட்சா"வின் ரொமான்டிக் வீடியோ பாடல்!

நடிகர் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி நடித்துள்ளார். 
 
மேலும், பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, நரேன், மதுசூதன ராவ் உள்பட பலன் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆர்யா கிராமத்து முரடனாக நடித்திருக்கும் இப்படத்திற்கு அவர் கட்டுமஸ்தான தோற்றத்தை வைத்திருக்கிறார்.
 
தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஜூன் 2ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் " கறிக்குழம்பு வாசம்" என்ற ரொமான்டிக் பாடல் வெளியாகி அனைவரது கனத்தையும் ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ!