வித்தியாசமான கமல் படத்தின் போஸ்டர்… எந்த படத்தின் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

Last Modified வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:35 IST)

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை நேற்று
மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக நேற்றைய முன் தினம் தெரிவித்ததில் இருந்தே சமூகவலைதளத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.
இதையடுத்து நேற்று முன் தினம் அவர் தனது டிவிட்டரில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்.


அதில் கமலின் உருவம் துப்பாக்கிகளால் உருவாக்கப்பட்டு இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் ஆங்கிலத்தில் ‘once upon a time there lived a ghost’ என எழுதப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் கவனத்தை ஈர்க்க சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள் இது எந்தபடத்தின் போஸ்டரின் காப்பி எனக் கண்டுபிடித்து விட்டனர்.

ஜெசன் ஸ்டேத்தம் நடிப்பில் உருவான மெக்கானிக் படத்தின் போஸ்டரில் இருந்து தழுவிதான் இந்த போஸ்டரை உருவாக்கி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :