’தலைவர் 168’ படத்தின் நாயகியாகும் ‘அசுரன்’ நடிகை

Last Modified புதன், 16 அக்டோபர் 2019 (09:23 IST)
சமீபத்தில் வெளியான தனுஷின் ’அசுரன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
நேற்று இந்த படம் ரூபாய் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷின் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தனுஷ் ரசிகர்களுக்கு பெருமையான ஒரு விஷயம்

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷின் அபாரமான நடிப்பை அடுத்து அவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் நடிப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. மலையாளத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தமிழில் நடித்த முதல் படமே அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. இந்த புகழ் அவருக்கு ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ’தலைவர் 168’ படத்தில் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஜோதிகாவின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜோதிகா ஏற்கனவே ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ’சந்திரமுகி’ படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. மொத்தத்தில் தலைவர் 168 படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பது இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :