ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (13:45 IST)

ஆசையால் அழிந்த அண்ணாச்சி?; சரவணபவன் ஓனர் வழக்கு! – படமாக்கும் ஜெய்பீம் இயக்குனர்!

Saravanabhavan
ஜீவஜோதியின் கணவரை சரவணபவன் உரிமையாளர் கொன்ற வழக்கை மையப்படுத்தி படம் எடுக்க உள்ளதாக ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிரபலமாக உள்ள சரவணபவன் உணவகத்தின் உரிமையாளரான ராஜகோபால் தனது கடை ஊழியரின் பெண்ணான ஜீவஜோதி மீது ஆசைக் கொண்டதும், அதற்காக ஜீவஜோதியின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமாரை கொன்ற வழக்கும் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ராஜகோபாலன் குற்றவாளி என தீர்ப்பு வெளியான நிலையில் சிறையில் இருந்த ராஜகோபாலன் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த கொலை வழக்கில் கணவர் கொலைக்கு நீதி கேட்டு ஜீவஜோதி நடத்திய சட்டப்போராட்டத்தை மையப்படுத்தி படம் எடுக்க உள்ளதாக ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “சரவணபவன் ராஜகோபாலை எதிர்த்து ஜீவதோதி நடத்திய சட்டப்போராட்டத்தை நான் பத்திரிக்கையாளராக இருந்தபோது கவனித்து வந்துள்ளேன். அதனை புதிய பரிமாணத்தில் திரைப்படமாக எடுக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியில் தோசா கிங் (Dosa King) என்ற பெயரில் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.