விஸ்வரூபம் 2' படத்தை விஜய் டிவி வாங்கிவிட்டதா?

Last Modified திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (13:35 IST)
கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படம் இன்னும் 4 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது.
தற்போது வந்துள்ள ஒரு தகவலின்படி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றுவிட்டதாக தெரிகிறது. சற்றுமுன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு விஸ்வரூபம் படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் 'விஸ்வரூபம் 2' படத்தின் சாட்டிலைட் உரிமை இந்த டிவிக்கே கிடைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறதுஇதில் மேலும் படிக்கவும் :