நயன்தாரா கேட்ட சம்பளத்தால் அதிர்ந்து போன இந்தியன் 2 படக்குழு !

Last Modified வெள்ளி, 7 டிசம்பர் 2018 (17:36 IST)
இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளத்தால் அதிர்ந்து போன படக்குழு அம்மா தாயே நீங்க நடிக்கவே வேண்டாம் ஆள விடுங்க என்று கூறி வேறு நடிகையை புக் செய்து விட்டனராம்  படக்குழுவினர். 


 
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தல அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். 
 
2.0 படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கும் இந்தியன்-2 படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
 
ஆனால் நயன்தாரா ரூ. 6 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் எங்களுக்கு லேடி சூப்பர் எல்லாம் வேண்டாம் சுமாரான ஸ்டார் வச்சு கூட படத்தை எடுத்துக்குறோம் ஆள விடுமா தாயி என்று ஒதுங்க பிறகு நடிகை காஜல் அகர்வாலை புக் செய்துவிட்டனர். 
 
இதற்கு முன்பு இதே போன்று தன் காதலன் விக்னேஷ் சிவன் பேச்சை கேட்டு ராஜம் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து உலக புகழ்பெற்ற பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டார் நயன்தாரா . பின்னாளில் அதை நினைத்து நினைத்து விக்னேஷிடம் புலம்பினார் .


இதில் மேலும் படிக்கவும் :