மீண்டும் ஆரம்பித்தது இந்தியன் 2 – ஷூட்டிங் வராத கமல் !

Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:04 IST)
மேக்கப் பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கமலின் இந்தியன் 2 ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் கமல் இல்லாதக் காட்சிகளைப் படக்குழு எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலானாலும்ம் 2.0 பட ரிலீஸ் தாமதம், கமலின் அரசியல் பணிகள் போன்றவற்றால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. கடைசியாக ஒரு வழியாக ஜனவரி 18 அன்று இந்தியன் 2 படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக உருவானது.

ஆனால் ஆரம்பித்து சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம் கமலின் இந்தியன் தாத்தா மேக் அப்பில் இயக்குனர் ஷங்கர் திருப்தி அடையவில்லையாம். எனவே மேக் அப் விஷயங்கள் தொடர்பாக வேறு சில முயற்சிகள் செய்யப்பட்டன. அதற்கிடையில் இருந்த இடைவெளியில் கமல் தனது அரசியல் பணிகளில் கவனம் செலுத்தினார்.


இதற்கிடையில் இப்போது மேக் அப் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நடக்கும் படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்ளவில்லையாம் இப்போது காஜல் அகர்வால், சித்தார்த், ஆர் ஜே பாலாஜி ஆகியோர் நடிக்கும் காட்சிகள்  இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. தன் அரசியல் பணிகளை முடித்துவிட்டு  மார்ச் முதல் வாரத்தில்தான் கமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடக்க இருப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் பணிகளில் கமல் ஈடுபட இருப்பதால் மார்ச் மாதத்திற்குப் பிறகு மீண்டும் தேர்தல் முடிந்த பின்னரே கமல் ஷூட்டிங்கில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :