முத்த காட்சிகளா?? சிம்புதான் எனக்கு வாத்தியார்: ஹரீஸ் ஜாலி டாக்

Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (21:17 IST)
சிந்து சமவெளி, பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரீஷ் கல்யாண். ஆனால், இவர் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் மிகவும் பிரபலாமனார். அதவாது இளைஞர்களுக்கு பிடித்த நடிகரனார். 
 
தற்போது அவர் நடிப்பில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் முத்த காட்சிகலை பற்றியும், சிம்புவை பற்றியும் பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு, 
 
சிம்பு எனக்கு சகோதரனை போல. எனது முக அமைப்புக்கு ஏற்றவாறு முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? எப்படி நிற்க வேண்டும்? எப்படி மேக்கப் போட வேண்டும்? என நடிப்பில் சின்ன சின்ன விஷயங்களை சொல்லித் தருவார். சிம்பு எனக்கு சினிமா வாத்தியார். 
 
அதேபோல், முத்த காட்சிகள் எனக்கு இயல்பாக வருகிறது என்பது அபத்தமானது. வேண்டுமென்றால் ரைசாவிடம் கேட்டுப் பாருங்கள் முத்த காட்சிகள் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று. எல்லா படங்களிலும் முத்தக் காட்சி வைத்தால் அதுவே ஒரு பிராண்ட் போல ஆகிவிடும். அதனால் எனது அடுத்தடுத்த படங்களில் அப்படியான காட்சிகள் இருக்காது என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :