ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (08:06 IST)

வீட்டை விட்டே வெளியே வராமல் எடுத்து முடிக்கப் பட்ட திரைப்படம்! ஊரடங்கில் உருவான முதல்படம்!

ஊரடங்கு சினிமா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வராமலேயே ஒரு படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னாலேயே மார்ச் 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டன. இதனால் எந்த வொரு சினிம தொடர்பான வேலையும் தற்போது வரை நடைபெறவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் சும்மா இருக்காமல் இயக்குநர் ராகுல் கபில் நிச்சயம் ஒரு படத்தையே எடுத்து முடித்துள்ளார்.

ஆனால் இந்த படத்திற்காக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இயக்குனர் காட்சிகளை விவரித்ததை நடிகர்களான ஹரிஷ் உத்தமன் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் தங்களிடம் உள்ள ஐபோன்களில் படம்பிடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விரைவில் அமேசான் அல்லது ஏதேனும் ஒரு ஓடிடி பிளாட்பார்ம்களில் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.