ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (17:33 IST)

மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது மரைக்காயர் திரைப்படம்.

இந்திய சினிமாவில் பிரமாண்ட திரைப்படங்களை உருவாக்கி வந்தது என்றால் பாலிவுட் சினிமா தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாக்கள் பாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்தவகையில் எந்திரன், 2.0 , பாகுபலி  மற்றும் புலி முருகன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அவை உருவாகும் மொழிகள் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றன.

அந்த வகையில் இப்போது மலையாள சினிமாவிலேயே முதல் முறையாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது மோகன்லால் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மரைக்காயர் திரைப்படம். இந்த படத்தை மோகன்லாலின் நண்பர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் எல்லாம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 21 ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.