ஒரு வழியாக ஒரு சுமாரான படத்தைக் கொடுத்த அமேசான் – ரசிகர்கள் ஆறுதல்!

Last Modified சனி, 17 அக்டோபர் 2020 (10:22 IST)

அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

பொன்மகள் வந்தாள் , பெண்குயின் மற்றும் சைலன்ஸ் என மொக்கையான திரைப்படங்களாக வெளியிட்டு வந்த அமேசான் பிரைம் மேல்ல் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். அதை போக்கும் விதமாக இப்போது அமேசான் பிரைம் புத்தம் புது காலை என்ற சுமாரான படத்தை ரிலீஸ் செய்து ஆறுதல் அடைந்துள்ளது.

கொரோனா காரணமாக எத்தனையோ உயிர்கள் பலியான நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள்
ஆயிரக்கணக்கான கி மீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்டதை பற்றியோ எந்த வித அக்கறையும் இல்லாமல் பாசிட்டிவி எனும் கருத்தைக் கொண்டு எலைட் மனிதர்கள் எப்படி தங்கள் நாட்களை புத்தம் புதிதாக ஆரம்பிக்கிறார்கள் என சொல்வதே இந்த குறும்படங்களின் தொகுப்பு. இதில் கார்த்திக் சுப்பராஜின் மிராக்கிள் மட்டும் விதிவிலக்கு.

ஆனால் சொல்ல வந்த விஷயத்தை டெக்னிக்கலாக நன்றாக சொல்லி இருப்பதால் மற்ற படங்களை விட பரவாயில்லை என ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது இந்த திரைப்படம்.
இதில் மேலும் படிக்கவும் :