ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (22:09 IST)

புதிய பட ஷூட்டிங் தொடங்கிய பிரபல நடிகர்

prithviraj
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஷூட்டிங்  தொடங்கியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிரித்விராஜ்.இவர்  தமிழில் சத்தம் போராதே, கனா கண்டேன், நினைத்தாலே இனிக்கும்,வெள்ளித்திரை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் லூசிபர் படம் வெளியாகி சூப்பட் ஹிட்டானது.

இந்த நிலையில், இவர் தற்போது ஜெய ஜெய ஜெய ஹே படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புககள் எதிர்ப்பு கூறியது.

இதற்கு மலையாள திரையுலகினர்  கண்டனம் தெரிவித்து, பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று கூறினர்.இந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.

இதுகுறித்த புகைப்படங்கள் இன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.