வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 27 பிப்ரவரி 2020 (17:41 IST)

திரௌபதி படம்... அரசியல் தலைவர்களுக்கு திரையீடு !

திரௌபதி படம்... அரசியல் தலைவர்களுக்கு திரையீடு !

சமீபத்தில் திரௌபதி என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதுபற்றி சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்கள்  எழுந்தன.  இந்நிலையில் நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தினை போலீஸ் பாதுக்காப்புடன் அரசியல் கட்சி தலைவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
 
நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ( ஷாலினியின் சகோதரர் ). ஷீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி.
 
ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனவும், இது ஆவணக்கொலையை பற்றியது எனவும் பலரும்  தெரிவித்துள்ளனர்.  அதனால் இப்படம் வெளிவந்தால் பிரச்சனை எழும்ப வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
 
எனவே, போலீஸ் பாதுக்காப்புடன், இப்படத்தின் பிரத்யேக காட்சி சென்னை பிரசாத் லேப்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. இதில், பாஜவின் ஹெச்.ராஜா, அர்ஜூன் சம்பத், கே.ராஜன் உள்ளிட்டோருக்கு இப்படம் திரைப்படத்தைப் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது, திரௌபதி சாதித் திரைப்படம் என்ற தோற்றத்தை யாரோ உருவாக்கிவிட்டார்கள்.இது உண்மைக் காதல் திரைப்படம் ; சமூக விழிப்புணரை இத்திரைபடம் ஏற்படுத்தும்  என தெரிவித்துள்ளார்.