திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (20:15 IST)

’’நேரத்தை வீணடிக்காதீர்கள்...’’தனுஷ், சிம்பு பட நடிகை ரசிகர்களுக்கு அறிவுரை...

தனுஷ் நடித்த மயக்கம் என்ன சிம்பு நடித்த  ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யா.

இவர் தமிழ், இந்தி, ஆகிய  படங்களில் நடித்து, தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தைச் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட ரிச்சா தனது கணவருடம் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.

ஆனால் இவர் திரும்பவும் சினிமாவில் நடிக்க வரவுள்ளதாகப்  பலரும், வந்ததிகளைப் பரப்பி வந்த நிலையில், ரிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் சில ஆண்டிகளுக்கு முன் நடிப்பை விட்டுவிட்டேன். ஆனால் எனது ரசிகர்கள் கற்பனையாக உலகில் வாழும்படிசொல்கிறார்கள் .உங்கள் நேரத்தைப் பொழுதுபோக்க என் பெயர் புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம். அதேசமயம் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்! நீங்கள் என் வதிற்கேற்ப என்னை மதித்தால்தான் உங்களால் எனக்கு மகிழ்ச்சி  என்று  அறிவுரை கூறியுள்ளார்.