திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (15:49 IST)

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் டிஜிட்டல் உரிமம் விற்பனை!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ள டான் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ், சிவாங்கி  மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமையை ஜி நிறுவனம் சுமார் 30 கோடிக்கும் மேல் வாங்கியுள்ளதாம். இது சிவகார்த்திகேயன் படத்துக்கு இதுவரை இல்லாத விற்பனை என்று சொல்லப்படுகிறது.