பிக்பாஸ் வீட்டில் இன்று வரப்போகும் இரண்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா! கசிந்தது ப்ரோமோ!

Last Updated: செவ்வாய், 25 ஜூன் 2019 (15:51 IST)
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று இரண்டு புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரவிருப்பதாக புதிய ப்ரோமோ ஒன்று கூறுகிறது. 


 
இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது.  கடைசியாக வெளிவந்த இரண்டு ப்ரோமோக்களில் சண்டையும் அழுகையுமாக வெளிவந்த நிலையில், இந்த மூன்றாவது ப்ரோமோ வீடியோவால் போட்டியாளர்கள் மிகவும் சந்தோஷமாக காணப்படுகிறார்கள். 
 
இதனை கண்ட சாண்டி, இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் இந்த வீடு எப்போது யுத்தக்களத்தை பார்க்கபோகிறது என தெரியவில்லை, அநேகமா அடுத்த வாரத்திலிருந்து ஒரு யுத்தக்களமாக மாறுமென்று நினைக்கிறன், அந்த யுத்தத்தில் நானும் இருப்பேனென்று நினைக்கிறன் என்று சாண்டி கூறுகிறார் . 


 
அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் அல்லது மிர்னாலினி கலந்து கொள்ள நிறைய வாய்ப்பு இருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவலும் கிடைத்துள்ளது. தற்போது பிக் பாஸ் தகவலும் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :