திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (13:43 IST)

பவதாரணியோடு கடைசி புகைப்படம்… இயக்குனர் வெங்கட் பிரபு சோகம்!

தமிழ் சினிமாவில் இசைஞானி எனக் கொண்டாடப்படும் இளையராஜாவின் மகளான பவதாரணி நேற்று கல்லீரல் புற்றுநோய் காரணமாக இயற்கை எய்தினார். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் பவதாரணியும் ஒருவர். பவதாரணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். பாரதி படத்தில் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் அவரது பாடும் திறமைக்கு சான்றாக அமைந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இலங்கையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 47. அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக அவரது சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா இலங்கைக்கு சென்றுள்ளார். அவரின் உடல் தேனி பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பவதாரணியின் சகோதரர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட் பிரபு பவதாரணியோடு தங்கள் குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.