திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (07:53 IST)

கமல்ஹாசனை சந்தித்த போது நடுங்கினேன்… ஃபேன்பாய் தருணத்தைப் பகிர்ந்த ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி!

இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது. அதன் பின்னர் ஓடிடியில் வெளியாகி அதிலும் மாநிலம் தாண்டி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி நடிகர் கமல்ஹாசனை சந்தித்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில் “நான் இன்று இயக்குனர், சினிமா காதலர் என்று அறியப்படுகிறேன் என்றால் அதற்குக் காரணம் ஜீனியஸ் கமல்ஹாசன்தான். திரையில் அவரைப் பார்த்துதான் வளர ஆரம்பித்தேன். சினிமா என்சைக்ளோபீடியாவை சந்தித்ததில் மகிழ்ச்சி.  என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயம். ஃபேன்பாய் தருணம். அவரை பார்த்தபோது நடுங்கினேன். லவ் யூ கமல் சார்” எனக் கூறியுள்ளார்.

ஜூட் ஆண்டனி தன்னுடைய அடுத்த படத்துக்காக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.