திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (08:49 IST)

தென்னிந்திய பாடல்கள் படைக்காத சாதனையை நிகழ்த்திய ரௌடி பேபி!

கடந்த சில வருடங்களில் பெரியவர்கள் முதல் சின்ன குழந்தைகள் வரை அனைவர் மனதிலும் இடம்பெற்ற பாடல் என்றால் அது ரௌடி பேபிதான். அந்த பாடல் வரிகளும், நடன அசைவுகளும் சேர்ந்து ஏகோபித்த வரவேற்பைக் கொடுத்தன.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடித்த மாரி 2 படத்தில் ரௌடி பேபி பாடல் இடம்பெற்றது. இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, தனுஷ் பாடல் வரிகளை எழுதினார். பிரபுதேவா இந்த பாடலுக்கு நடனம் அமைத்தார்.

ரிலீஸான போதே வைரல் ஹிட்டான இந்த பாடல் இப்போது வரை இணையத்தில் கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யுட்யூப் தளத்தில் இதுவரை இந்த பாடலை 150 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை எந்தவொரு தென்னிந்திய பாடலும் படைக்காத சாதனையை ரௌடி பேபி பாடல் படைத்துள்ளது.