ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (06:51 IST)

தனுஷின் ஹாலிவுட் படம் என்ன ஆச்சு? டுவிட்டரில் தனுஷ் தகவல்

கோலிவுட், பாலிவுட்டில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் முதன்முதலாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கடந்த ஆண்டு ஒப்பந்தமானார்.



 
 
 'The Extraordinary Journey of the Fakir' என்ற தலைப்பு கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முற்றிலும் முடிந்துவிட்டதாக தனுஷ் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
 
இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் டப்பிங் உள்பட அனைத்து போஸ்ட் புரடொக்ஷன்களும் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வெளிவரும் என தெரிகிறது.
 
பிரபல ஈரான் இயக்குனர் Marjane Satrapi இயக்கும் இந்த படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களான Berenice Bejo, Erin Moriarty, மற்றும் Barkhad Abdi, 'பண்டிட் குவீன்' புகழ் சீமா பிஸ்வாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.