"தர்பார்" பட காமெடி நடிகர் இவர் தான்! ரஜினியின் முதற்கட்ட படப்பிடிப்பே அவருடன் தான்!

Last Updated: புதன், 10 ஏப்ரல் 2019 (18:53 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்"  படத்தின்  காமெடி நடிகர் பற்றிய சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. ரஜினியின் முதற்கட்ட படப்பிடிப்பே அவருடன் தானாம். 
 

 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
ரஜினிக்கு ஜோடியாக லேடிய சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இந்த படத்தில் காமெடி நடிகராக  தமிழ் சினிமாவின் காமெடி கிங் யோகி பாபு தான் தேர்வாகியுள்ளாராம்.  மேலும் சூப்பர் ஸ்டார் மற்றும் யோகி பாபுவின் காட்சிகள் தான் முதலில் படமாக்கப்படவிருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. தர்பார் படத்தின் மூலம்  ரஜினியின் படத்தில் யோகி பாபு நடிப்பது இதுவே முதன்முறை, ரஜினி - யோகி பாபுவின் கம்போ தர்பாரில் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொருத்திருந்து பாப்போம். 


இதில் மேலும் படிக்கவும் :