ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:46 IST)

எல் ஐ சி படத்தை டீலில் விட்ட ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்… பின்னணி என்ன?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்தானாம். ஏனென்றால் அவர் இப்போது இந்தியன் 2 படத்தின் வண்ணத்திருத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம். இந்தியன் 2 படம் ஜூன் மாதத்தில் ரிலீஸாக உள்ளதாக ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.