ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (18:48 IST)

வட்டி மட்டும் 50 கோடி ரூபாய் கட்டினேன்: ‘ஆச்சார்யா’ விழாவில் புலம்பிய சிரஞ்சீவி

Chiranjeevi
‘ஆச்சார்யா’ படத்திற்காக வாங்கிய கடனுக்கு வட்டி மட்டுமே 50 கோடி ரூபாய் கட்டினேன் என இந்த படத்தின் புரமோஷன் விழாவில் நடிகர் சிரஞ்சீவி புலம்பியுள்ளார் 
 
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ஆச்சார்யா’ திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது 
 
ஹைதராபாத்தில் இந்த படத்தின் விழாவில் பேசிய சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ திரைப்படம் ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் தாமதம் ஆனது என்றும் அதனால் வட்டி மட்டுமே 50 கோடி ரூபாய் கட்டினேன் என்றும், இந்த பணத்தில் ஒரு மீடியம் பட்ஜெட் படமே எடுத்து இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 இதுபோன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்காக திரையரங்குகளில் கட்டணத்தை அதிகரிக்க அரசு ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்