புரமோவே இவ்வளவு மொக்கைன்னா? நிகழ்ச்சி எப்படி இருக்கும்?

புரமோவே இவ்வளவு மொக்கைன்னா? நிகழ்ச்சி எப்படி இருக்கும்?
siva| Last Modified ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (15:51 IST)
புரமோவே இவ்வளவு மொக்கைன்னா? நிகழ்ச்சி எப்படி இருக்கும்?
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 13 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 14வது நாள் நிகழ்ச்சி தொடங்க உள்ளது

இந்த நிலையில் கமல் வரும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுமே சுவராஸ்யமாக இருக்கும் என்பதுதான் கடந்த மூன்று சீசன்களில் இருந்த வரலாறு. ஆனால் இந்த சீசனில் முதல் வாரமே கமல்ஹாசன் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் சொதப்பினார். எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் நிகழ்ச்சி நகர்ந்து சென்றது

அதேபோல்தான் நேற்றும் ஒரு ஒரு சில நிமிடங்கள் தவிர எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் நிகழ்ச்சி சென்றது. அதுமட்டுமின்றி இடையில் அரசியல் பேசி ஓவர் ஆக்சனும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்றைய 3 புரோமோ வந்துவிட்ட நிலையில் ஒரு புரமோவிலும் கமல்ஹாசன் உருப்படியாக எந்த விஷயத்தையும் செய்தது போல் தெரியவில்லை. சற்று முன் வெளியான மூன்றாவது புரமோவிலும் அவர் கேப்ரில்லா மற்றும் சுரேஷ் ஆகியோர்களிடம் உரையாடும் சாதாரண காட்சிகளே உள்ளன

இன்றைய 3 புரோமோக்களும் மொக்கையாக இருக்கும் நிலையில் நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :