வனிதாவை காப்பாற்ற இன்னும் எத்தனை பேரைத்தான் கொலை செய்வீங்க பிக்பாஸ்?

Last Modified வியாழன், 11 ஜூலை 2019 (08:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை வெளியேற்ற இந்த வாரம் வாக்குகளை ஒருபக்கம் மக்கள் குவித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மொக்க டாஸ்க் ஒன்றை கொடுத்து வனிதாவை காப்பாற்ற பெரும் முயற்சி செய்து வருகிறார் பிக்பாஸ்
வனிதாவுக்கு கொலைகாரி என்ற பட்டம் கொடுத்த பிக்பாஸ், சக போட்டியாளர்களை கொலை செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கின்றார். சாக்சியின் மேக்கப்பை கலைப்பது, மோகன் வைத்யாவை டான்ஸ் ஆட வைப்பது, ஷெரினுக்கு முத்தம் கொடுப்பது, ரேஷ்மா மீது கோல்ட் காப்பியை கொட்டுவது என மொக்கையான டார்கெட்டை கொடுத்து வனிதாவை எளிதில் வெற்றி பெற செய்து வருகிறார் பிக்பாஸ்
இந்த டாஸ்க்கில் வனிதா வெற்றி பெற்றுவிட்டால் அவரை வரும் சனிக்கிழமை கமல்ஹாசன் மூலம் சேஃப் செய்வதே பிக்பாஸின் திட்டமாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. பிக்பாஸின் இந்த திட்டத்திற்கு கமல்ஹாசனும் வாங்கிய சம்பளத்திற்காக தலையாட்டுவார் என்றே கருதப்படுகிறது

இந்த வாரம் வனிதா அல்லது மீரா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வேண்டும் என மக்கள் விரும்பினாலும் சரவணன் அல்லது மோகன் வைத்யா ஆகிய இருவரில் ஒருவரைத்தான் பிக்பாஸ் வெளியேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :