ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (15:05 IST)

வைரலாகும் ஓவியா பாட்டு!

பிக்பாஸ்க்கு பிறகு ஓவியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற ரீதியில் ஓவியா ஆர்மிகள் அவரை உற்சாகமாக வரவேற்கின்றன.


தமிழ் சினிமாவிலும் மீண்டும் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்பதுக்கு முன்பு நடித்த படத்தின் பெயர் சீனி. இந்த படத்தின் பெயரை ஓவியாவை விட்டா யாரு என  மாற்றம் செய்து விட்டார்கள்.

தற்போது ஓவியா பிருத்வி பாண்டியராஜனுடன் கணேசா மீண்டும் சந்திப்போம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹரிகீதா பிக்சர்ஸ் சார்பில் அருண் விக்ரம கிருஷ்ணன் தயாரிக்கிறார். ரத்தீஷ் எரட்டே என்ற புதுமுகம் இயக்குகிறார். விபின் கே.ராஜ், சிபி இசை அமைக்கிறார்கள்.

படத்தின் புரமோசனுக்காக ஓவியாவை புகழ்ந்து ஒரு பாடல் வெளியிட்டிருக்கிறார்கள். "வியா வியா ஓவியா... நீ கிளியோபாட்ரா ஆவியா.. நீ மனச திறக்கும் சாவியா..." என தொடங்கும் அந்த பாடல் தற்போது யூ டியூப்பில் வைரலாகி வருகிறது.