"உங்கள காலி பண்ணுறதுதான் என்னோட வேலை" - களத்தில் இறங்கிய கவின் !

Last Updated: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (17:26 IST)
நண்பர்களுக்காக விட்டு கொடுக்கிறேன் என்று கூறி வந்த கவினை ரவுண்டு கட்டி டாஸ்க் என்ற பெயரில் சாண்டி கேள்வி கேட்க அதில் கவினின் உண்மை முகம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 


 
இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில், கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கிற்காக சாண்டி கவினிடன் " நட்பிற்கு விட்டுக்கொடுத்துட்டு போகுறேன்னு சொல்லுறீங்க... ஏன் நீங்க போட்டியிட்டு ஜெயிக்கலாம்ல எனக்கும் அதுவேணும்னு ஆசை படலாமே என்று கேள்வி கேட்கிறார். அதற்கு கவின் நட்புக்கு விட்டுக்கொடுத்துட்டு போனேன்னு சொல்லவில்லை. இப்போ நான் ரெடி ..அதுக்கு தான் "கேம் ஆன்" டீ சர்ட்லாம் போட்டுட்டு இருக்கேன் பாருங்க ...உங்க எல்லாரையும் காலி பண்ணிட்டு ஃபர்ஸ்ட் வின் பண்ணுறேன்னா இல்லையான்னு பாருங்க. 
 
செய்றேண்ணா இல்லையான்னு பாருங்க உங்க எல்லாரையும்.. என்ன நெனச்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாரும்...உங்க கூடவே அப்டியே வந்துட்டு போய்டுவேன்னு நெனச்சுட்டு இருக்கீங்களா..உங்களை காலி பண்ணிட்டு அப்பறோம் அவங்கள காலி பண்ணுறது தான் என்னோட பிளான் என்று கூறி மற்ற போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுக்கிறார் கவின். 
 


இதில் மேலும் படிக்கவும் :