ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (08:09 IST)

க்யூட்னெஸ் ஓவர்லோடட்… அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்த்திரமாக ஐந்து சுந்தரிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பேபி அனிகா. அதன் பின்னர்  அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து கவனத்தை ஈர்த்தார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தற்போது கதாநாயகியாக ப்ரமோஷன் ஆகியுள்ள அனிகா நடித்துள்ள ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளும், முத்தக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. பதின் பருவ காதலர்கள் பற்றிய படம் என்பதால் இது சாதாரணமானதுதான் என்றாலும், பலரும் இதுபற்றி அனிகா மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இதுபற்றி இப்போது விளக்கம் அளித்துள்ள அனிகா “நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்ததால் பலரும் என்னை குழந்தையாகவே நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு இப்போது 18 வயது ஆகிறது” எனக் கூறியிருந்தார். இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.