திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (13:14 IST)

நயன்தாரா பிரபலம் ஆக இதுதான் காரணம்! – ஆண்ட்ரியா சர்ச்சை கருத்து!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகை நயன்தாரா குறித்து நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பிண்ணனி பாடகர், நடிகை என பன்முகத்தன்மையுடன் விளங்குபவர் ஆண்ட்ரியா. இவர் நடித்த தரமணி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது பிசாசு2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திலும், மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா “சினிமாவில் நடிகைகள் பிரபலம் ஆக முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. நடிகை நயன்தாரா போன்றவர்கள் விஜய், அஜித், ரஜினி போன்றவர்களோடு இணைந்து நடித்ததால் பெரிய நடிகையாக பிரபலம் ஆகியுள்ளார்கள். ஆனால் என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது. அதேபோல ஒரு கதைக்கு தேவை என்றால் மட்டுமே நான் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன்” என கூறியுள்ளார்.