1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (10:59 IST)

குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடிகை அமலா பாலுக்கு 7 ஆண்டுகள் சிறை?

முன்னனி நடிகையான அமலா பால், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு, பின் அவருடன் ஏற்பட்ட மனகசப்பால் விவாகரத்து செய்துவிட்டு, தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கிவிட்டார். 

 
இந்நிலையில் போலியான முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கிய விவகாரத்தில், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது. புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து ரூ. 1.12 கோடி மதிப்புள்ள எஸ்.கிளாஸ் பென்ஸ் கார் வாங்கியுள்ளார். வரி குறையும் என்பதற்காக இந்த கார் புதுச்சேரியில் போலி முகவரி மூலம் பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
 
தற்போது அவர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.