திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (18:56 IST)

டயர் ஓட்டிய அஜித்: வைரல் வீடியோ!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் 4வது படமாகும்.
 
இந்த படத்தின் படபிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில் தனது குடும்பத்திருடன் நேரம் செலவிட்டு வருகிறார். சமீபத்தில், தனது மகள் அனோஷ்காவின் பள்ளி விழாவில் கலந்து கொண்டார்.
 
அப்போது, மகளுடன் இணைந்து டயர் ஓட்டும் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் பட கெட்டப்பில் கலந்துக்கொண்டார் அஜித். 
 
அங்கு கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் ஷாலினியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ...